கிராமம் வாரியாக, பணியுடன் கற்பிப்பையும் சாத்தியமாக்கும் AI கருவிகளுக்கான கட்டுமானத் தொகுதிகளை உருவாக்குகிறோம்.

Woman leaning against a pole, looking at her phone in a group of women

காரடி, மஹாராஷ்டிரா, இந்தியா – இரவு 10:30 மணியளவில், நீண்ட நாள் வேலைக்குப் பிறகு, பேபி ராஜாராம் போகலே தூங்குவதற்கு முன் இன்னும் ஒரு பணியை முடிக்க வேண்டியதுள்ளது.

அவர் படுக்கையில் தனது கால்களை மடித்தபடி அமர்கிறார். ஒரு மூலையில், இந்துக் கடவுளான கிருஷ்ணருக்கு ஒரு விரிவான பூஜை அலங்காரம் செய்யப்பட்ட வண்ணமயமான விளக்குகளால் ஜொலிக்கிறது. அவரது மறைந்த கணவரின் உருவப்படம், முழுமையான சாம்பல் மீசையோடும்  நேரடி பார்வையோடும் படுக்கையின் மேலே தொங்குகிறது.

அவர் தனது ஸ்மார்ட்போனில் ஒரு செயலியைத் திறந்து, தெளிவான, கம்பீரமான குரலில், தனது தாய்மொழியான மராத்தியில் ஒரு கதையை உரக்கப் படிக்கத் தொடங்குகிறார், மகாராஷ்டிரா மாநிலத்தின் மொழி மராத்தி ஆகும். அங்கு அவர் பூனா நகரின் பரபரப்பான புறநகர்ப் பகுதியான காரடியில் வசிக்கிறார்.

மராத்தியில் AI மாடல்களைப் பயிற்றுவிக்க போகலேயின் குரலோடு இன்னும் பல குரல்கள் பயன்படுத்தப்படவுள்ளன. அதே நேரத்தில், அவர் தனக்கெனவும் மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்கிறார் – இந்த இடத்தில் அது தனிப்பட்ட நிதி பற்றியதாகும். வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன, எப்படிச் சேமிப்பது மற்றும் மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடிகளைத் தவிர்ப்பது போன்ற நடைமுறை தகவல்களை பொழுதுபோக்கு வழியில் வழங்குவதற்காக அவர் படித்துக்கொண்டிருக்கும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இப்போது எனது ஸ்மார்ட்ஃபோன் மூலம் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய முடிகிறது,” என்று அவர் கூறுகிறார். இந்தியாவின் UPI கட்டண முறையைப் பயன்படுத்தி பொருட்களுக்கு பணம் செலுத்த அவர் கற்றுக்கொண்டார். மேலும், வங்கிச் சேவைக்கு போனை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் அவர் கற்றுக்கொண்டார்.

A woman sitting on a bed, looking at her smartphone
பேபி ராஜாராம் போகலே மராத்தியில் ஒரு கதையை தனது மொபைலில் உள்ள கார்யா செயலியில் படிக்கிறார். இது? மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கிறிஸ் வெல்ஷ் எடுத்த புகைப்படம்.
A woman’s hands holding a smartphone
பேபி ராஜாராம் போகலே தனது முறைசாரா முதலீட்டுக் குழுவில் உள்ள சில பெண்களுடன். தங்கள் ஸ்மார்ட்போன்களில் மராத்தியைப் பதிவுசெய்து எழுதுவதன் மூலம், AI மொழி மாதிரிகளை உருவாக்கப் பயன்படும் தரவுத்தொகுப்புகளை உருவாக்க உதவுகிறார்கள்.

போகலே அவர்கள், “உலகின் முதன்மையான நெறிமுறை தரவு நிறுவனம்” என்று விவரிக்கப்படும் கார்யா என்ற சமூகத் தாக்க அமைப்பில் பணியாற்றுகிறார். சமஸ்கிருதத்தில்

இதன் அர்த்தம் “உங்களுக்கு கண்ணியம் தரும் வேலை”  என்பதாகும்.

“சம்பாதிக்கவும், கற்றுக் கொள்ளவும், வளரவும்” என்பது கார்யாவின் மந்திரம், இது இந்தியாவிலும் பிற இடங்களிலும் தரவுத்தொகுப்புகள் உருவாக்கப்படும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த விரும்புகிறது. நவீன டிஜிட்டல் பொருளாதாரத்தில் செழித்தோங்குவதற்கான கருவிகளைக் கொடுக்கும் அதே வேளையில் முடிந்தவரை பலரை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதே குழுவின் குறிக்கோள். அதே நேரத்தில், கார்யா வழக்கத்திற்கு மாறான பணியாளர்களுடன் உயர்தரம் வாய்ந்த நெறிமுறை தரவுத்தொகுப்புகளை உருவாக்குகிறது.

இந்தத் தரவுத்தொகுப்புகள் மதிப்புமிக்கவை. சுமார் 80 மில்லியன் மக்கள் மராத்தி பேசினாலும், டிஜிட்டல் உலகில் அது சரியாகப் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை. இந்தியாவில் உங்களக்கு இந்தி அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாவிட்டால், மக்கள் செழிக்க உதவும் தொழில்நுட்பத்தை அணுகுவது கடினமாக இருக்கும் – பயன்பாடுகள், கருவிகள் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டென்ட்களை ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். நூற்றுக்கணக்கான மில்லியன் சாத்தியமான வாடிக்கையாளர்கள் அந்த தொழில்நுட்பங்களிலிருந்து பயனடையலாம் என்பதுதான் மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அந்த “வளம் குறைவாக உள்ள” மொழிகளில் கிடைக்கச் செய்வதற்கான போட்டியில் உள்ளன.

“எனது குரல் பதிவு செய்யப்படுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன், மேலும் எனது குரலால் யாரோ ஒருவர் மராத்தி மொழியைக் கற்கவுள்ளார்,” என்று 53 வயதான போகலே கூறுகிறார், “இந்த கருவிகள் மற்றும் அம்சங்களை மராத்தியில் கிடைக்கச் செய்வதில் பெருமைப்படுகிறேன்.”

அவர் தனது வீட்டில் இருந்து மசாலா மற்றும் மிளகாய் அரைக்கும் ஒரு சிறிய வியாபாரத்தை நடத்துகிறார். “நான் சம்பாதித்ததன் மூலம் ஒரு பாகத்தை வாங்கி எனத கிரைண்டரை சரி செய்தேன்” என்று அவர் கூறுகிறார். “இதற்கு பொதுவாக என்னிடம் பணம் இருக்காது.”

கார்யா: உயர்தர தரவை உருவாக்குதல் மற்றும் வறுமையை ஒழித்தல்

AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்கும், முக்கியமாக கிராமப்புறங்களில் உள்ள இந்தியர்களுக்கு வேலைகளை உருவாக்கும் ஆராய்ச்சிக்கும் பல இந்திய மொழிகளில் தரவுத்தொகுப்புகளை கார்யா உருவாக்குகிறது

கார்யா 2017 இல் பெங்களூரில் மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி திட்டமாக தொடங்கப்பட்டது.

காலப்போக்கில், இந்தியாவின் பல மொழிகளில் உயர்தர மொழி தரவுத்தொகுப்புகளை உருவாக்குனராகவும், கல்வி மற்றும் வருமானம் மூலம் கிராமப்புற இந்தியர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் ஒரு வழியாகவும் கார்யாவுக்கு மகத்தான ஆற்றல் இருந்தது  தெளிவானது. 2021 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து சுயாதீனமான அமைப்பாக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்கள் தாய்மொழிகளில் பதிவுசெய்து எழுதப் பயன்படுத்தும் பயன்பாடு உட்பட அதன் முழுச் செயல்பாடும் Microsoft Azure இல் கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் Azure OpenAI சேவையையும் அதன் தரவைச் சரிபார்க்க Azure AI அறிவாற்றல் சேவைகளையும் பயன்படுத்துகிறது. மைக்ரோசாப்ட் அதன் முக்கிய வாடிக்கையாளர்களில் ஒன்றாகும்.

கார்யா போகலே போன்ற தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் $5 USD சம்பளம் வழங்கப்படுகிறது, இது இந்தியாவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத்தை விட மிக அதிகம். 11 நாட்களுக்கு மேல், போகலே சுமார் ஐந்து மணிநேரம் வேலை செய்து 2,000 ரூபாய் அல்லது சுமார் $25 USD சம்பாதித்தார். வேலை ஈடுபாடு மற்றும் கல்வி (எனவே “கற்றல்”) மற்றும் தொடர்ச்சியான ஆதரவு கார்யா தொழிலாளர்கள் அறிவாற்றலுடன் செழிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், கார்யா உருவாக்கிய தரவு மறுவிற்பனை செய்யப்பட்டால், தொழிலாளர்கள்  ராயல்டியையும் பெறுவர்.

கார்யாவின் நிறுவனர்களுக்கு லட்சிய இலக்குகள் உள்ளன. 2030க்குள் 100 மில்லியன் மக்களைச் சென்றடையும் இலக்குடன் 200க்கும் மேற்பட்ட பிற இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் கார்யா கூட்டு சேர்ந்துள்ளது. பின்னர் இதே நபர்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளில் சேவை செய்யும் கருவிகளுக்கு தரவு அடிப்படையாக இருக்கும் என்று நம்புகிறது. பாலினம் மற்றும் பிற காரணிகளின் அடிப்படையில் சார்புகளைத் தணிக்கும் வழிகளில் தரவுத்தொகுப்புகளைச் சேகரித்து செயலாக்க கார்யா முயற்சிக்கிறது. மேலும் உள்ளடக்கிய தரவை உருவாக்க, பலதரப்பட்ட நபர்களை கார்யா அணுகுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

27 வயதான மனு சோப்ரா அவர்கள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 78 சதவீத கிராமப்புற இந்தியர்கள் ஸ்மார்ட்ஃபோன் அணுகலைக் கொண்டிருப்பதோடு, குறைவான மொழிகளில் தரவுத்தொகுப்புகளுக்கான மகத்தான தேவையும் ஒரு மகத்தான வாய்ப்பாகும் என்று அவர் கூறுகிறார். கார்யா அதன் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் மேலும் ஆராய்ச்சி செய்வதற்கும் போதுமான அளவு அதன் லாபத்தை அதன் பணியாளர்களுக்கு வழங்கிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Outside portrait of a man standing in a busy street
இந்தியாவின் புனேவின் காரடி சுற்றுப்புறத்தில் இருக்கும் கார்யாவின் CEO, மனு சோப்ரா. இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கிறிஸ் வெல்ஷ் எடுத்த புகைப்படம்.

“AI ஐ உருவாக்க உலகம் ஒரு டிரில்லியன் டாலர்களை செலவிடப் போகிறது” என்று சோப்ரா கூறுகிறார். “எனவே அடுத்த 20 ஆண்டுகளில், அதில் எந்த சதவீதத்தை நான் நேரடியாக மிகவும் தேவைப்படும் நபர்களின் பணப்பையில் கொண்டு வர முடியும்? கிராமப்புற இந்தியா, செயற்கை நுண்ணறிவின் சிறந்த கட்டமைப்பாளராகவும், AI தொழில்நுட்பங்களின் சிறந்த பெறுநராகவும் இருக்கும் என்று நாங்கள் உண்மையாகவே நினைக்கிறோம்.

இந்தியாவின் 28 மாநிலங்களில் 24 நகரங்கள் மற்றும் கிராமங்களில் இதுவரை கார்யா நிறுவனத்தில் பணியாற்றிய 30,000க்கும் மேற்பட்டவர்களில் போகலேயும் ஒருவர்.

வளம் குறைந்த மொழிகளில் தொழில்நுட்பத்தை அணுகும்படி செய்தல்

OpenAIஇன் ChatGPT மற்றும் மைக்ரோசாப்டின் Copilot போன்ற AI கருவிகள் ஆங்கிலத்தில் நன்றாக வேலை செய்கின்றன, ஏனெனில் இந்த மொழியில் இணையத்தில் எழுதப்பட்ட மற்றும் ஆடியோ உள்ளடக்கங்கள் ஏராளமாக உள்ளன. 1.4 பில்லியன் மக்கள் வாழும் இந்தியாவில், 22 அதிகாரப்பூர்வ மொழிகள், நூற்றுக்கணக்கான பிற மொழிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பேச்சுவழக்குகளைக் கொண்டுள்ளது. இந்தியர்களில் சுமார் 60 சதவீதம் பேர் இந்தி பேசுகிறார்கள், சுமார் 10 சதவீதம் பேர் ஆங்கிலம் பேசுகிறார்கள், இதனால் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் நவீன உலகில் செழிக்க உதவும் டிஜிட்டல் கருவிகள் இல்லாமல் இருக்கிறார்கள்.

பெங்களூரில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தின் மொழி தொழில்நுட்ப வல்லுநரும் ஆராய்ச்சியாளருமான கலிகா பாலி அவர்கள், “பெரும்பாலான இணையம் ஆங்கிலத்தில் இருப்பது ஒரு நல்ல துவக்கம் அல்ல…அதை நாங்கள் சரிசெய்ய விரும்புகிறோம்”. அவர் தனது ஆராய்ச்சிக்காக கார்யாவால் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துகிறார்.

“எல்லா இடங்களிலும் பரவி வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக மக்கள் இருக்க வேண்டும். அவர்களின் மொழியின் காரணமாக யாரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இருந்து விலக்கப்படக்கூடாது,” என்று அவர் கூறுகிறார்.

Portrait of a woman smiling
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள மைக்ரோசாஃப்ட் ஆராய்ச்சி ஆய்வகத்தில் மொழி தொழில்நுட்ப வல்லுநரும் ஆராய்ச்சியாளருமான, கலிகா பாலி. இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கிறிஸ் வெல்ஷ் எடுத்த புகைப்படம்.

“மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில், முழு பூமிக்கும் அதிகாரம் அளிக்க விரும்புகிறோம் என்று சொல்கிறோம், சரிதானே? மேலும் உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.”

AI, மொழிப் பாதுகாப்பின் செயல்முறையையும் பெரிய மொழி மாதிரிகளில் (LLMs) பயன்பாட்டையும் பெரிதும் துரிதப்படுத்தியுள்ளது என்று பாலி கூறுகிறார். இது ஆன்லைன் மற்றும் AI கருவிகளை உருவாக்குவதில் பயனுள்ளதாக இருப்பதோடு, அரிதான அல்லது இறக்கும் மொழிகளைப் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

“இப்போது நாம் இந்த copilot வகையான விஷயங்களை மிக விரைவாக உருவாக்க முடியும்,” என்று அவர் கூறுகிறார். “முன்பு நாங்கள் மொழிப் பாதுகாப்பு பற்றிப் பேசும்போது, பல தசாப்தங்களாக நடந்த முயற்சிகளைப் பற்றி பேசினோம். … இவை அனைத்தும் இப்போது மாதங்களாக குறைக்கப்படலாம்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் ஈடுபடும் வேகத்தில் இருப்பதாகக் கூறும் கார்யா, வேலை மற்றும் கல்வி மிகவும் தேவைப்படும் பங்கேற்பாளர்களைத் தேடுகிறார் – பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள். பிரீமியம் சம்பளத்திற்குக் கூடுதலாக, இது வேலை முடிந்ததும் பயிற்சி மற்றும் பிற வகையான ஆதரவும் வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பம் உண்மையில், மக்களின் ஆசைகளை பெருக்க உதவும்’

சோப்ரா டெல்லியில் “பஸ்தி” – எனப்படும் ஒரு முறைசாரா குடியேற்றத்தில் வளர்ந்தார், மேலும் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் AI ஐ மையமாகக் கொண்டு கணினி அறிவியலைப் படிக்கும் போது அவர் வளர்ந்து வரும் சமத்துவமின்மை தனது நோக்கத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.

“நான் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றபோது, முதலில் உணர்ந்தது என்னவென்றால், எங்கு சென்றாலும், மக்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பத்தைக் கொண்டிருந்தனர், எல்லோரும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அனைவருக்கும் ஆசை இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார். “அவர்கள் புதிய திறன்களைக் கற்கும் திறனைக் கொண்டுள்ளனர். அந்த இரண்டு விஷயங்களும் இருந்தால், தொழில்நுட்பம் உண்மையில், மக்களின் ஆசைகளைப் பெருக்கி, தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள உதவும்.

11 நாட்களில் போகலே செய்த பணியானது, பயனுள்ள தகவல்களைக் கற்றுக்கொள்வதோடு தரவை உள்ளிடும் பணியை இணைக்க முடியுமா என்பதைச் சோதிக்கும் ஒரு பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அவர்களுக்கான கணிசமான அளவு பணம் சம்பாதிக்கும் அதே வேளையில், அதைச் சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான நிதிக் கருவிகளைப் பற்றியும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

இரண்டு சகோதரிகளைப் பற்றிய தொடர் கதையாக இந்த பொருள் வழங்கப்பட்டது, மேலும் இந்த கதையில் மராத்தியில் பேசப்படும் ஒலிகளையும் தாளங்களையும் பதிவுசெய்ய பணியாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சத்தமாக வாசித்தனர். “நாங்கள் கதையை மிகவும் ரசித்தோம்,” என்று போகலே கூறுகிறார், “அந்த கதையில், ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்கும் சாதாரண மக்கள் இருந்தனர். அவர்கள் சம்பாதித்த பணம் எளிதில் செலவழிக்கப்படும், சேமிப்பு இருக்காது. சுருக்கமாக, எப்படி சேமிப்பது என்பதே ஒரு கேள்வியாக இருந்தது.

கார்யாவின் தலைமைத் தாக்க அதிகாரி சஃபியா ஹுசைன், கதை வடிவம் வெற்றியை நிரூபித்ததாகவும், பங்கேற்பாளர்கள் பலர் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் கதையை சத்தமாக வாசித்ததாகவும் கூறினார்.

Outside portrait of a girl smiling in a field
கார்யாவின் தலைமை தாக்க அதிகாரி, சஃபியா ஹுசைன். இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கிறிஸ் வெல்ஷ் எடுத்த புகைப்படம்.

“அவர்கள், ‘நான் இந்த வேலையைச் செய்யப் போகிறேன், கதையை உங்களுக்குப் படிக்கப் போகிறேன்” என்று ஹுசைன் கூறுகிறார். “அவர்கள் உண்மையில் உற்சாகமடைந்து ஆச்சரியப்படுவார்கள், ‘ஓ, அடுத்து என்ன நடக்கிறது? அவளுக்கு கடன் கிடைக்குமா? அல்லது திருமணத்திற்குச் செலுத்தும் அளவுக்கு அவளிடம் பணம் இருக்குமா?’

வேலையை கல்வியுடன் இணைப்பதன் மூலம், கார்யா தனது பணியாளர்களை மரியாதையுடன் நடத்தவும், வருமானத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளை உருவாக்கவும் முயற்சிப்பதாக அவர் கூறுகிறார். “நாங்கள் மக்களுக்கு அவர்களின் நேரத்திற்கு பணம் செலுத்துகிறோம், அவர்கள் செய்வது மதிப்புமிக்கது என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று அவர் கூறுகிறார். “அது மட்டுமின்றி, உங்கள் ஓய்வு நேரத்தில் கற்றுக்கொள்வதற்கான ஒரு பாடமும் இங்கே உள்ளது.”

இறுதியில் பல கார்யா தொழிலாளர்கள் அமைப்பில் பல்வேறு பாத்திரங்களில் இணைவார்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளாகப் பணியாற்றுவார்கள் என்று தான் நம்புவதாக ஹுசைன் கூறுகிறார். அனைவருக்கும் வேலை செய்ய தொழில்நுட்பத்தை வைப்பதே எங்கள் பெரிய அளவிலான நோக்கம் என்று அவர் கூறுகிறார்.

“மராத்தி போன்ற இந்த மொழிகளில் நாங்கள் தரவுகளை சேகரிக்கும் போது, மில்லியன் கணக்கான பேசுபவர்களைக் கொண்ட இந்த சமூகங்களும் இந்த மக்கள்தொகைகளும் தொழில்நுட்ப புரட்சியில் பின்தங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த முயற்சிக்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

திட்டத்தில் முழு சமூகங்களையும் ஈடுபடுத்துதல்

மைக்ரோசாப்ட் ஆராய்ச்சியாளரான, கலிகா பாலி, கார்யாவின் வெற்றிக்கான திறவுகோல்களில் ஒன்று, திட்டத்தில் முழு சமூகங்களையும் ஈடுபடுத்த முயற்சிப்பதாகும். கார்யாவின் பெரும்பாலான பணியாளர்கள் பெண்கள், மேலும் ஆண்களை விட அவர்களுக்கு “நம்பிக்கை வட்டங்கள்” அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

“ஆண்கள் இரண்டு விஷயங்களை மட்டுமே கேட்க வேண்டும்: இது எனக்கு சரி வருமா? எனக்கு சம்பளம் கிடைக்குமா?”. ஆனால் பெண்கள் “என் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா? இப்படிச் செய்வதால் என் குடும்பத்துக்கும் எனக்கும் கெட்ட பெயர் வருமா? இது ஏதாவது ஒரு வகையில் எனக்கு தீங்கு விளைவிக்குமா? இவற்றைக் கடந்த பிறகே அவர்கள் தளத்திற்கு வந்து பணம் ஈட்ட முடியும்”.

“கார்யாவின் நன்மை என்னவென்றால், அது களத்தில் அதிக நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அவர்கள் உண்மையில் அவர்கள் இருக்கும் சமூகங்களில் ஈடுபட்டுள்ளனர்,” என்று அவர் கூறுகிறார்.

புனேவில் உள்ள அவரது சுற்றுப்புறத்தில், பொகலே நன்கு அறியப்பட்ட நபர், அவர் உலகளவில் பேபி தாய் என்று அழைக்கப்படுகிறார், தாய் என்றால் “மூத்த சகோதரி”. அவர் பல டஜன் பெண்களுடன் ஒரு முறைசாரா நிதி வலையமைப்பை நடத்துகிறார், அவர்கள் மாதந்தோறும் சேமிப்பைத் திரட்டுகிறார்கள் மற்றும் ஒரு சிறு வணிகத்தைத் தொடங்குவது அல்லது பள்ளிக் கட்டணம் செலுத்துவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்த பெரிய தொகையை அதில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். பெண்கள் அடிக்கடி தங்கள் உள் முற்றத்தில் வியாபாரம் பேசவோ அல்லது சுற்றித் திரிவதற்கோ வருவார்கள். அவளது மிளகாய் மற்றும் மசாலா அரைக்கும் உபகரணங்கள் சிறிய முற்றத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய தகர கொட்டகையில் உள்ளன.

Three women sitting in on a step
இடமிருந்து, பார்வதி கெம்ப்ளே, சுரேகா சஞ்சய் கெய்க்வாட் மற்றும் பேபி ராஜாராம் போகலே ஆகியோர் தங்கள் சுய உதவி வங்கிக் குழுகுறித்து இந்தியாவின் புனேவில் உள்ள கரடி சுற்றுப்புறத்தில் விவாதிக்கின்றனர். இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கிறிஸ் வெல்ஷ் எடுத்த புகைப்படம்.

51 வயதான, சுரேகா சஞ்சய் கெய்க்வாட், அவரது அண்டை வீட்டார் மற்றும் நண்பர் ஆவார். அவர் தனது வீட்டிலிருந்து அரை மணி நேரத்தில் நடந்துசெல்லக் கூடிய தொலைவில் ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். அவரும் கார்யாவுக்காக தன் மொபைலில் மராத்தியை வாசிக்கிறார். தன் முன் படிக்கட்டுகளில் போகலேயுடன் அமர்ந்திருந்த அவர், இந்த அனுபவத்தில் என்ன பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, ஒரு பரந்த சிரிப்பை உதிர்த்தார்.

“நான் இதை வீட்டில் செய்ய முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை,” என்று அவர் கூறுகிறார். “இதற்காக நான் மீண்டும் பேருந்தில் ஏறவோ நாள் முடிவில் வேறு எங்கும் செல்லவோ வேண்டியதில்லை.”

வேலையின் கல்விக் கூறு ஒரு சிறப்பம்சமாகும், கெய்க்வாட் கூறினார். வங்கியில் நிலையான வைப்புத்தொகையை எவ்வாறு உருவாக்குவது என்பதை அவர் கற்றுக்கொண்டார், மேலும் அவர் தனது மகனின் கல்லூரிப் படிப்பிற்காக மிகவும் திறம்பட சேமிப்பதற்கான ஒரு வழியாக அதைச் செய்தார்.

சமீபத்தில் ஒரு காலை நேரத்தில், கார்யாவிடம் பணிபுரிந்த பல பெண்கள் போகலேயின் வீட்டில் சந்திப்பிற்காக வருகை தந்தனர். மீனா ஜாதவ், 55, தனது தையல் தொழிலுக்கு பொருள் மற்றும் தையல் கருவிகளை வாங்குவதற்காக பணத்தை பயன்படுத்தினார் – அவர் விற்பனை செய்வதற்கான சட்டைகளை தயாரித்தார். தனது கற்றலுக்கு நன்றி தெரிவித்த அவர், இப்போது சேமிப்புக் கணக்கு மற்றும் ATM ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது தனக்குத் தெரியும் என்று கூறினார். வங்கிக்குப் போகாமல் பணத்தை எடுக்கலாம், டெபாசிட் செய்யலாம் என்பது அவருக்கு அது வரை தெரியாத நிலையிலேயே இருந்தது.

இன்னொரு பெண், தான் கற்ற பாடங்களையும், சம்பாதித்த பணத்தையும் தன் மகளின் கல்விக்காக சேமிப்பு கணக்கு தொடங்க பயன்படுத்தினார்.

அவர்கள் அனைவரும் வேலையை ரசித்ததாகவும், நிதி திட்டமிடல் மற்றும் ஆன்லைன் கருவிகள் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். பெண்களுக்கான கூடுதல் நன்மைகள் என்னவென்றால், அவர்களின் ஸ்மார்ட்போன்கள் மற்ற வகையான வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்பதைக் கற்றுக்கொண்டதே!

பைலட் திட்டத்தில் உள்ள பல பெண்களுக்கு ஸ்மார்ட்போனை எப்படி பயன்படுத்துவது என்பது இதற்கு முன்னர் தெரியாது என்று அவர் கூறுகிறார். “அவரது கணவர் மற்றும் மாமியார், ‘பரவாயில்லையே, நீ இப்போது பல விஷயங்களை கற்றுக்கொண்டாய், அவை மிகவும் நல்லது” என்று கூறுகிறார்கள்.”

பேபி ராஜாராம் போகலே தனது முறைசாரா முதலீட்டுக் குழுவில் உள்ள சில பெண்களுடன். தங்கள் ஸ்மார்ட்போன்களில் மராத்தியைப் பதிவுசெய்து எழுதுவதன் மூலம், AI மொழி மாதிரிகளை உருவாக்கப் பயன்படும் தரவுத்தொகுப்புகளை உருவாக்க உதவுகிறார்கள்.