Microsoft Inspire: பங்காண்மையினூடாக AI நிலைமாற்றத்தை துரிதப்படுத்துதல்

Microsoft Inspire banner image

Click here to read this blog post in English.

Microsoft இன் வெற்றிகரமான செயற்பாட்டில் கைகோர்ப்பு என்பது பிரதான உள்ளங்கமாக அமைந்துள்ளது. எமது பங்காளர் வலையமைப்பில் உலகளாவிய ரீதியிலிருந்து 400,000க்கு அதிகமான அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர். குறிப்பாக இன்றைய AI-அடிப்படையிலான உலகில், வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். Microsoft Inspire என்பது, வாடிக்கையாளர் வெற்றிகரமான செயற்பாடுகள் மற்றும் புதிய வாய்ப்புகளை பகிர்ந்து கொள்ளல் மற்றும் Microsoft தயாரிப்புகளுடன் ஈடுபாட்டைக் கொண்டிருப்பதற்காக எமது பங்காளர்கள் ஆற்றும் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

எமது பங்காளர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில், நாம் Microsoft Inspire ஐ ஆரம்பித்திருந்ததுடன், அதற்காக ஜுன் மாதத்தின் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்ட, Microsoft ஆண்டின் சிறந்த பங்காளர் விருதுகள் 2023 இன் இறுதி நிலைக்கு தெரிவாகியவர்கள் மற்றும் வெற்றியாளர்களின் சாதனைகளின் கொண்டாட்டத்துடன் Microsoft Inspire ஐ அறிமுகம் செய்திருந்தோம். பல்வேறு பிரிவுகளில், பங்காளர்களின் வெற்றிகரமான செயற்பாடுகள் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் அமைந்திருப்பதுடன், அவற்றில் தீர்வுகள் பிரிவுகள், தொழிற்துறைகள், வியாபார மாற்றியமைப்பு மற்றும் சமூக தாக்கம் போன்றன அடங்கியுள்ளன.

இந்த ஆண்டின் Microsoft Inspire என்பது தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர் மற்றும் பங்காளர்களுக்கான AI நிலைமாற்றத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கும். அதிகளவு AI வலுவூட்டப்பட்ட தீர்வுகளை பகிர்ந்து கொள்வதையிட்டும், பல்வேறு வழிகளில் தமது நிறுவனங்களினுள் AI புத்தாக்கங்களை Microsoft பங்காளர்கள் எவ்வாறு பிரயோகிக்கலாம் என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர் வெற்றியை முன்னெடுக்க புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கு AI திறன்களின் விரிவாக்கத்தை மேற்கொள்வதும் அடங்கியிருந்தது. இந்த ஆண்டின் நிகழ்வில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் தொடர்ந்தும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

அறிமுகப்படுத்தும் Bing Chat Enterprise

பெப்ரவரி மாதத்தில் புதிய Bing அறிமுகம் செய்யப்பட்டது முதல், சக்தி வாய்ந்த புதிய AI toolகளினூடாக தமது நிறுவனங்களுக்கு வலுவூட்ட முடிகின்றமை தொடர்பில் பல கூட்டாண்மை வாடிக்கையாளர்கள் விறுவிறுப்பாக திகழ்கின்றமை தொடர்பில் எம்மால் அறிந்து கொள்ள முடிந்ததுடன், அவர்கள் தமது நிறுவனங்களின் டேட்டா பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கரிசனை கொண்டுள்ளமை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடிந்தது. அதன் காரணமாக, இன்றைய தினம் நாம் Bing Chat Enterprise, ஐ அறிமுகம் செய்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதுடன், இதனூடாக, நிறுவனங்களுக்கு AI-powered chat வசதி பணிச் செயற்பாடுகளுக்கும், வணிக டேட்டா பாதுகாப்பையும் வழங்கப்படுகின்றது. உள்ளீடு செய்யப்படும் தரவுகள் மற்றும் வெளியீடு செய்யப்படும் தரவுகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டிருக்கும், இதனால் வணிக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பெறுபேறுகளையும், அதிக வினைத்திறனுடன் புத்தாகமாக திகழவும் முடியும்.

Microsoft 365 E5, E3, Business Premium மற்றும் Business Standard ஆகிய அங்கீகாரம் பெற்ற தீர்வுகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இன்று முதல் எவ்விதமான மேலதிகக் கட்டணங்களுமின்றி Bing Chat Enterprise அறிமுகம் செய்யப்படுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Bing Chat Enterprise ஐ எதிர்காலத்தில் பாவனையாளர் ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு 5 அமெரிக்க டொலர்கள் எனும் கட்டணத்தில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். Bing Chat Enterprise ஊடாக Bing Chat Enterprise பற்றியும், எவ்வாறு பயன்படுத்துவது பற்றியும் அறிந்து கொள்ளவும்.

Microsoft 365 Copilot Copilot Pricing பற்றிய அறிவித்தல்

இன்றைய தினம் Microsoft 365 Copilot Pricing தொடர்பில் அறிவிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பொதுவாக அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், Microsoft 365 E3, E5, Business Standard மற்றும் Business Premium வாடிக்கையாளர்களுக்கு – ஒரு பாவனையாளருக்கு மாதமொன்றுக்கு 30 அமெரிக்க டொலர்கள் எனும் கட்டணத்தில் வழங்கப்படும்.

Microsoft 365 Copilot என்பதனூடாக பத்தி எழுதல், மொழிபெயர்ப்பு போன்றவற்றை அசல் நேர செயற்பாடுகளாக மேற்கொள்ளக்கூடிய வகையில், ஆயிரக் கணக்கான திறன்களை உங்களின் ஆணையின் பிரகாரம் செயலாற்றக்கூடிய வகையில் தனது generative AI app களை கொண்டுள்ளது. அத்துடன் நின்றுவிடாமல், உங்கள் documents, emails, calendar, chats, meetings மற்றும் contacts ஆகியவற்றில் காணப்படும் வியாபார தரவுகள் போன்றவற்றின் அடிப்படையில், அவற்றை உங்களின் செயற்பாட்டு பொருளடக்கங்களுடன் ஒன்றிணைத்து, தற்போது நீங்கள் பங்கேற்கும் சந்திப்பு, கடந்த வாரம் தலைப்பொன்றில் நீங்கள் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்கள், மற்றும் நீங்கள் முன்னெடுத்த chat களிலிருந்து தரவுகளை ஒன்றிணைத்து – Copilot இனால் உங்களின் வினாக்களுக்கு அதிகளவு பொருத்தமான, துல்லியமான மற்றும் செயலாற்றக்கூடிய பதில்களை வழங்கும்.

தினசரி மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் appகளில் Microsoft 365 Copilot ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் presentation ஒன்றை PowerPoint இல் வடிவமைத்தாலும், Excel இல் data visuals ஐ உருவாக்கினாலும் அல்லது Teams meeting இல் சந்திப்புகளை மேற்கொண்டாலும், Outlook inbox இல் Copilot இனால் உங்களின் அதிகவேலைப்பளு இல்லாமல் செய்யப்பட்டு, உங்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.

AI உடன் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகவர்களுக்கு வலுவூட்டல்

விற்பனையாளர்கள் தம்வசம் பல்வேறு தெரிவுகளை கொண்டிருப்பார்கள். எனவே, நாம் Microsoft Sales Copilot இல் Dynamics 365 விற்பனைகளில் அதிகளவு செயற்பாட்டுத்திறன்களை உள்ளடக்குவதுடன், AI செயற்படுத்தப்பட்ட வாய்ப்பு சாராம்சம், சீரமைக்கப்பட்ட மின்னஞ்சல் வரைவுகள் மற்றும் சந்திப்புகள் தயார்ப்படுத்தல்கள் போன்றன அடங்குகின்றன. இதனூடாக, விற்பனையாளர்களுக்கு தமது உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ள முடிவதுடன், Customer Relationship Management (CRM) task automation (Salesforce அடங்கலாக) உடன் அதிகளவு டீல்களை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதுடன், செயலாற்றக்கூடிய அசல்-நேர உள்ளம்சங்கள் மற்றும் AI-உதவியளிக்கப்பட்ட பொருளடக்கங்கள் மற்றும் பரிந்துரைப்புகளினூடாக வாடிக்கையாளர் தொடர்பாடல்களை பிரத்தியேகமான மாற்றியமைத்துக் கொள்வதற்கான உதவிகளை வழங்குகின்றோம். Microsoft Sales Copilot இல் ஏற்கனவே காணப்படும் Teams calls summaries மற்றும் email thread summaries போன்றவற்றுக்கு AI ஆற்றல்களை பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது. 2022 ஜுன் மாதம் அறிவிக்கப்பட்ட Viva விற்பனைகளைத் தொடர்ந்து விற்பனையாளர்களின் அனுபவங்கள் மாற்றியமைக்க ஆரம்பித்ததுடன், இந்த ஆற்றல்கள் தற்போது Sales Copilot இன் அங்கமாக அமைந்துள்ளன. Microsoft Sales Copilot பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

Microsoft Inspire இல், புதிய வாடிக்கையாளர்களான Virgin Money போன்றவற்றுக்கு நாம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதுடன், Copilot உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட chatbotகளை பயன்படுத்தில் அவற்றின் வாடிக்கையாளர் சேவை திணைக்களுக்கு வலுவூட்டுவதுடன், வலு மெய்நிகர் முகவர்களுக்கு (Power Virtual Agents) வலுவூட்டுகின்றோம். சில நிமிடங்களில், வியாபாரங்களால் chatbot ஐ பயிற்றுவிக்க முடியும். இதற்காக, இயற்கை மொழியையும், உள்ளக மற்றும் வெளியக அறிவு மூலங்களை, வாடிக்கையாளர் சேவை அப்ளிகேஷன்கள் மற்றும் இணைய டேட்டாகள் ஆகியவற்றை Bing Search ஊடாக மேற்கோள் காண்பிக்கப்படுகின்றது. Virgin Money இன் chatbot ஊடாக மாதமொன்றில் 195,000க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடர்பாடல்களை மேம்படுத்த உதவுவதுடன், அவர்களின் சேவை முகவர்களுக்கு அதிகளவு சிக்கல்கள் நிறைந்த வாடிக்கையாளர் கோரிக்கைகளில் கவனம் செலுத்த உதவுகின்றது.

Power Automate இல் Process Mining

தமது பணிப்பாய்ச்சல்களில் தடங்கல்களை இனங்காண்பதில் நிறுவனங்களுக்கு அதிகளவு சிக்கல்கள் காணப்படுவதுடன், அவற்றை சீர் செய்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் சிக்கல்கள் நிலவுகின்றன. இதற்கு உதவும் வகையில், Microsoft இனால், அடுத்த தலைமுறை AI உள்ளம்சங்களைக் கொண்ட Power Automate Process Mining ஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு, AI-வலுவூட்டப்பட்ட உள்ளம்சங்கள் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே காணப்படும் செயன்முறைகளுக்கு செம்மையாக்கங்களை மேற்கொள்ள முடிவதுடன், low-code தன்னியக்கமயமாக்கல்களுடன் வினைத்திறன்களை கட்டியெழுப்ப முடியும். Process Mining உடன், பாவனையாளர்களுக்கு தமது வியாபாரத்தில் எவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பது பற்றிய புரிந்துணர்வைப் பெற முடியும் என்பதுடன், உள்ளம்சங்களை, app மற்றும் தன்னியக்கமயமாக்கல்களை உருவாக்கும் AI ஐ பயன்படுத்துவது மற்றும் தமக்கு அவசியமான தீர்வுகளை துரிதமாக கட்டியெழுப்பிக் கொள்ள Power Platform ஐ பயன்படுத்த முடியும். Process Mining in Power Automate பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

Azure OpenAI விரிவாக்கம் செய்யப்பட்ட கிடைப்பனவு

வியாபாரங்கள் Azure OpenAI சேவையை பின்பற்றுவது தொடர்பில் ஆர்வத்தைக் காண்பிப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சுமார் 4500 க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் இந்தத் தீர்வைப் பயன்படுத்துகின்றனர். நிறுவனசார் தரவுகளைப் பயன்படுத்தி, சொற்களை சுருக்கி மற்றும் பொருளடக்கங்களை உருவாக்கி chatbotகளை தயாரிப்பது என்பது உண்மையில் விறுவிறுப்பான அனுபவமாக அமைந்துள்ளது.

தற்போது இந்த சேவையை உலகளாவிய ரீதியில் காணப்படும் பல நிறுவனங்கள் மத்தியில் நாம் கொண்டு வருகின்றோம். கடந்த வாரம், Azure OpenAI சேவையை அணுகலை நாம் விரிவாக்கம் செய்திருந்தோம். வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் கிடைப்பனவை அதிகரித்திருந்தோம். ஆசியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்திருந்தோம்.

புதிய Azure ஆற்றல்கள் மற்றும் முதலீடுகள்

Azure Migrate & Modernize இன் கிடைப்பனவு மற்றும் அளவை அதிகரிப்பதற்காக குறிப்பிடத்தக்களவு முதலீடுகளை மேற்கொள்வது பற்றி அறிவிக்க முன்வந்துள்ளோம். அத்துடன் analytics மற்றும் AI க்கு  காணப்படும் அதிக கேள்வியை நிவர்த்திக்கும் வகையில் புதிய பிரத்தியேகமான முதலீடாக Azure Innovate ஐ அறிமுகம் செய்யவுள்ளோம்.  இந்த புதிய வழங்கல்களினூடாக சேவை வலையமைப்பு விஸ்தரிப்பு செய்யப்படும் என்பதுடன், உயர் வருமதிகளைப் பெற்றுக் கொடுத்து, வேகம், துல்லியமான நகர்வுகள் முதல் புதிய AI வலுவூட்டப்பட்ட appகளை கட்டியெழுப்பல் வரை ஆதரவளிக்கும்.

Epic உடன் மூலோபாய ஒன்றிணைவுகளை விரிவாக்கம் செய்தல்

முன்னணி சுகாதார பராமரிப்பு மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான Epic உடன் நாம் கொண்டுள்ள மூலோபாய ஒன்றிணைவுகளின் விரிவாக்கம் என்பது Microsoft மற்றும் அதன் பங்காளர்கள் இணைந்து பங்காற்றுகின்றமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இதன் போது, AI இன் வலிமையைப் பயன்படுத்தி, சிகிச்சையளிப்போருக்கு நிர்வாக செயற்பாடுகளில் குறைந்த நேரத்தை செலவிடவும், தரமான பராமரிப்பை வழங்குவதில் அதிகளவு நேரத்தை செலவிடவும் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது. Epic இல் ஒன்றிணைக்கப்பட்ட Azure OpenAI Service அதன் இலத்திரனியல் health record (EHR) மென்பொருளில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வழங்கி, சிகிச்சையளிப்போருக்கு நோயாளர்களுக்கு வினைத்திறனான முறையில் பதிலளிப்பதற்கு உதவும் வகையில் சிகிச்சைசார் தரவுகளை வழங்கி உதவுகின்றது. அத்துடன் Nuance DAX Express, உடன் எமது AI-வலுவூட்டப்பட்ட சிகிச்சைசார் ஆவணமாக்கல் ஆற்றல்களை நேரடியாக Epic workflows இல் இணைத்து, சேவை வழங்குநர்களுக்கு நிர்வாகப் பணிச் சுமையை குறைத்துக் கொள்ள உதவுவதுடன், நோயாளர்களுக்கு பராமரிப்பை வழங்குவதிலும், சுகாதாரபராமரிப்பு சேவைகளை மேம்படுத்தவும் உதவுகின்றது.

மேலும், Microsoft Inspire இல் Epic வாடிக்கையாளர்களுக்கு தற்போது Azure பெருமளவு சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி, பெருமளவு large Epic EHR தரவுக்கட்டமைப்புகளை முன்னெடுக்க உதவுவதாக அமைந்திருப்பதை அறிவிப்பதுடன், – செக்கனுக்கு 50 மில்லியன் தரவுக் கட்டமைப்புகளை அணுகும் வகையில் அமைந்துள்ளது. இதனூடாக, Epic வாடிக்கையாளர்களுக்கு முன்னர் காணப்பட்ட cloud உட்கட்டமைப்பு தீர்வுகள் எல்லைகளுக்கு அப்பால் அளவீடு செய்ய முடியும்.

புதிய Microsoft AI Cloud Partner Program

மற்றுமொரு மைல்கல்லாக, Microsoft Inspire இல் Microsoft AI Cloud Partner Program எனும் அடுத்த தலைமுறை பங்காளர் நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனூடாக, ஒவ்வொரு பங்காளருக்கும் Microsoft AI ஐயும் Microsoft Cloud ஐயும் பயன்படுத்தி வாடிக்கையாளர் பெறுமதியை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.  Microsoft AI Cloud Partner Program ஊடாக, பங்காளர்களுக்கு பரிபூரண முதலீட்டு இலாகாக்களை சகல வியாபார மாதிரிகளுக்கும் பொருந்தும் வகையில் முதிர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வழங்குகின்றோம்.

Microsoft AI Cloud Partner Program ஊடாக, உள்வாங்கல், திறனூட்டல், சந்தைச் சென்றடைவு, கொடுப்பனவுகள் மற்றும் இணைந்து விற்பனைகள் போன்றன அடங்கலாக முழுப் பங்காளர் வாழ்க்கைச்சுழற்சி வழங்கப்படுகின்றது. பங்காளர்களுக்கு முன்னைய நிகழ்ச்சித் திட்டங்களின் பெறுமதி மற்றும் அனுகூலங்கள் கிடைப்பதுடன், புதிய வழங்கல்களை அணுகல் மற்றும் AI இன் அனுகூலங்கள் போன்றவற்றை அணுகக்கூடியதாக இருக்கும். பங்காளருக்கு புதிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு மாற அவர்கள் எவ்விதமான நகர்வையும் மேற்கொள்ள வேண்டியதில்லை – மாறாக, நாம் பங்காளர்களை புதிய நிகழ்ச்சித் திட்டத்தில் உடனடியாக மாற்றியுள்ளதுடன், அவர்களின் ஏற்கனவே காணப்படும் அனுகூலங்கள் மற்றும் நிலைகளை பேணுகின்றோம். Microsoft AI Cloud Partner Program ஊடாக Microsoft AI Cloud Partner Program பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

மேலதிக பங்காளர் தகவல்கள்

பங்காளர்களுக்கு சந்தையை சென்றடைவு மற்றும் தமது வியாபாரங்களை மேம்படுத்திக் கொள்வது அடங்கலாக பல்வேறு மெருகேற்றங்களில் அடங்கியிருப்பவை:

  • ISV Success updates: கடந்த Microsoft Inspire இல் அறிவிக்கப்பட்டதைப் போன்று, ISV Success என்பது AI Cloud Partner Program ஐச் சேர்ந்த ISV பங்காளர்களுக்கான திறவுகோலாக அமைந்துள்ளது. இது தற்போது பொதுவாக கிடைக்கின்றது. ISV Success இனூடாக, தயாரிப்பு மற்றும் cloud அனுகூலங்கள், demo மற்றும் sandbox சூழல்கள், தொழில்நுட்ப கலந்தாலோசனைகள் ஆகியன அப்ளிகேஷன்களை கட்டியெழுப்பவும், பிரசுரிக்கவும் உதவுவதாக அமைந்துள்ளன. பிரசுரிக்கப்பட்டதும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அனுகூலங்களினூடாக Microsoft வணிக சந்தைப்பகுதியினூடாக டீல்களை துரிதப்படுத்த அனுகூலம் கிடைக்கின்றது. மேலும், ISV Success இல் பங்கேற்கும் பங்காளர்களுக்கு GitHub Copilot ஐ 2023 ஆம் ஆண்டின் இறுதியில் ISV Success இன் அங்கமாக அணுகும் வாய்ப்பும் கிடைக்கும்.
  • Multiparty private offers: Microsoft வணிக சந்தைப்பகுதியில் எமது தொடர்ச்சியான முதலீடுகளின் அங்கமாக, multiparty தனியார் சலுகைகள் பற்றியும் நாம் அறிவித்திருந்தோம். இதனூடாக, பங்காளர்களுக்கு ஒன்றிணைந்து பணியாற்ற வலுவூட்டப்படுவதுடன், Microsoft வணிக சந்தைப்பகுதிகளினூடாக மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க டீல்களை விற்பனை செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
  • அதிகளவு பங்காளர்களுக்காக புதிய தீர்வுகள் பங்காளர் நிலைகள்: AI Cloud Partner Program இன் அங்கமாக, புதிய நிலைகளை நாம் அறிமுகம் செய்கின்றோம். அதனூடாக, மேலதிக பங்காளர்களுக்கு தமது தொழில்நுட்ப ஆற்றல்களை வேறுபடுத்திக் கொள்ளவும் மற்றும் வாடிக்கையாளர் வெற்றியை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதில், பயிலல் பங்காளர்களுக்கான புதிய பயிற்சி சேவைகள் நிலை, Microsoft Cloud மற்றும் இதர தொழிற்துறை ISV நிலைகள் போன்றன அடங்கியுள்ளன.

இன்றைய அறிவிப்புகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைவதுடன், AI நிலைமாற்றத்தை மேற்கொள்வதற்கான எமது அர்ப்பணிப்பு, வாடிக்கையாளர் வெற்றியை முன்னெடுப்பது மற்றும் பங்காளர் வியாபார வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மையில் வலுவூட்டல் போன்றவற்றில் காண்பிக்கும் ஈடுபாடு தொடர்பிலும் மகிழ்ச்சியடைகின்றோம். Microsoft Inspire இல் மேற்கொள்ளப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான குறுகிய விளக்கமாக இது அமைந்திருப்பதுடன், மேலதிக விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தப் பதிவின் இறுதியில் காணப்படும் மேலதிக வளங்கள் பிரிவைப் பார்க்கவும்.

இன்றைய அறிவித்தல்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, register for Microsoft Inspire க்கு பதிவு செய்து கொள்வதற்கு மற்றும் சத்யா நதெல்லா, ஜட்சன் அல்தொஃப் மற்றும் நிகொல் டெசென் ஆகியோரின் முதல் நாள் உரைகளை பார்வையிடவும் அல்லது watch them on demand.

Related links:

Join us at Microsoft Inspire

Microsoft 2023 Partner of the Year Awards winners and finalists

Furthering our AI Ambitions – Announcing Bing Chat Enterprise and Updates to Microsoft 365 Copilot  

Find out how to get started with Bing Chat Enterprise

How Microsoft Sales Copilot will empower sellers and customer service agents

Learn more about Power Mining in Power Automate

New Azure capabilities and investments

Find more out about the Microsoft AI Cloud Partner Program

Tags: , , ,

Related Posts